கருணை உள்ளம் கொண்ட நல் இதயங்களே :
இந்த மாணவிக்கு உதவி செய்யுங்கள்
phone : 99439 - 31099 .
இடுப்பு வலிக்கு தவறான அறுவை சிகிச்சை :
படுத்த படுக்கையாக மாணவி வித்யா.B Sc .
இன்றைய தினமலர் நாளிதழில் வந்த ஒரு பரிதாபமான செய்தி :
தர்மபுரி கோட்டை காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சுகுமார். இவரது மனைவி சியாமளா. இவர்களுக்கு விக்னேஷ், வினோத் என்ற மகனும், வித்யா (23) என்ற மகளும் உள்ளனர்.வித்யா தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி., எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் முடித்துள்ளார். பத்து மாதங்களுக்கு முன் வித்யாவுக்கு இடுப்பு வலி ஏற்பட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, அவருக்கு இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.அறுவை சிகிச்சை செய்த பின் வித்யாவால், எழுந்து நடக்க முடியவில்லை. மூன்று மாதங்கள் வரை அங்கு சிகிச்சை பெற்றும் நடக்க முடியாத நிலை ஏற்பட்டதால், மீண்டும் அவரது பெற்றோர் தர்மபுரிக்கு அழைத்து வந்தனர் உயிர் காக்கும் உயர் சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் தனக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என, வித்யா நேற்று (ஜூலை 26) தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் (பொறுப்பு) மகேஸ்வரியிடம் மனு கொடுத்தார்..
பத்து மாதங்களாக படுத்த படுக்கையாக உள்ள வித்யாவால் எழுந்து நடக்க முடியாத நிலையும், உணவு முதல் அனைத்தும் படுக்கையில் வழங்க வேண்டி இருப்பதோடு, அவருக்கு துணையாக அவரது தாய் கூடவே இருக்கும் நிலையுள்ளது.இவரது தந்தை சுகுமாருக்கும் உடல் நிலை சரியில்லாததால், தொடர்ந்து வித்யாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.வித்யா விளையாட்டு வீராங்கனையாகவும் இருந்துள்ளார்.பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ள வித்யா, தொடர்ந்து எம்.எஸ்.சி., படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தார். தவறான அறுவை சிகிச்சையால் எழுந்து நடக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பது, அவரது குடும்பத்தினரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வித்யா தன் அம்மா உடன் |
இது குறித்து வித்யா கூறியதாவது:கடந்த அக்டோபர் 9ம் தேதி மதுரையில் அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பின் எழுந்து நடக்க முடியாமல் போனது குறித்து அங்கிருந்த டாக்டர்கள் கூறும் போது, இது போன்று பல ஆபரேஷன் செய்யப்படுகிறது. அதில், இது போன்று ஒன்று, இரண்டு நடக்கலாம். எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என கூறி விட்டனர்.மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் கோவை, சென்னை ஆகிய இடங்களில் பரிசோதனை செய்த போது, எழுந்து நடக்க முடியாமல் போனால் உடனடியாக மாற்று அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தியிருக்கலாம். தாமதம் ஆகி விட்டது. இருப்பினும் மாற்று அறுவை சிகிச்சை செய்தால், படுத்த படுக்கையில் இருந்து எழுந்து நடக்க, உட்கார வாய்ப்புகள் இருப்பதாகக் கூறினர்.
அறுவை சிகிச்சை செய்ய பல லட்சம் செலவாகும் என்பதால், மருத்துவ சிகிச்சை செய்ய முடியாத நிலையில் பத்து மாதங்களாக அவதிப்பட்டு வருகிறேன். இது போன்ற செய்தி வந்தால், டாக்டர்கள் அஜாக்கிரதையாக ஆபரேஷன் செய்ய மாட்டார்கள் என்பதால், என் நிலையைக் கூறினேன். எனக்கு மருத்துவ உதவிகள் வழங்க சேவை உள்ளமுள்ளவர்கள் முன் வந்தால் ஏற்க தயாராக உள்ளேன்.இவ்வாறு வித்யா கூறினார்.வித்யாவின் மருத்துவ உதவிக்கு முன் வருவோர் 99439 - 31099 என்ற மொபைல்போன் எண்ணில் அவரை தொடர்பு கொண்டு உதவலாம்.
நன்றி :தினமலர் .27 .07 .2010 .
Tweet | |||||
No comments:
Post a Comment