Jul 23, 2010

இட ஒதுக்கீட்டுப் பிரச்னையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

 இட ஒதுக்கீட்டுப் பிரச்னையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.,  ஜெ.ஜெயலலிதா கருணாநிதி, ஒரு ஒப்பீடு 
                                                              
கருணாநிதி அறிக்கை: 
கடந்த 1996ம் ஆண்டு  தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு,  இட ஒதுக்கீடு பிரச்னை குறித்து சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அதற்கு, "அந்தந்த மாநிலங்களின் நிலைகளுக்கேற்ப இட ஒதுக்கீட்டை அந்தந்த மாநில அரசுகளே நிர்ணயம் செய்து கொள்கிற அதிகாரம், மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டுமென்ற முறையில், அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதற்கு பார்லிமென்டில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேற்பட்ட ஓட்டு தேவை. இப்போது அது முடியுமா என்பது பிரச்னையாக இருக்கிறது. இருந்தாலும், முயற்சியிலே இந்த அரசு ஈடுபடும்' என பதில் அளித்தேன். 
                                              
**மத்திய  அரசில்  பதவி  என்றால்  முடியும்  மக்களின் பிரச்னை  என்றால்  அது  உங்களால்  முடியாது   தமிழ் மக்களை முட்டாள் ஆக்குவதில் உமக்கு நிகர் நீர்தான்  உம்மை மிஞ்ச ஆள் இல்லை.**


இந்த விவாதத்துக்குப் பின், 1997ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி, அன்றைய பிரதமர் தேவகவுடாவுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதி வலியுறுத்தியிருந்தேன். தமிழக முதல்வர் பொறுப்பில் 2006ம் ஆண்டு ஐந்தாவது முறையாக அமர்ந்த நான், 

**இதற்கு  இன்னொரு பாராட்டு விழா எடுத்து  விடலாம்  யார் காசில் 7 கோடி முட்டாள்கள் இருக்கிறார்கள். அவர்கள் வரி பணத்தில்தான். 250 கோடி செலவில் ஒரு மாநாடு.** 

அந்த ஆண்டு அக்டோபர் இறுதியில், அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினேன். இதற்கு முன், சோனியாவுக்கு இட ஒதுக்கீடு பிரச்னை குறித்து ஐந்து பக்கங்கள் கொண்ட விவரமான கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன். 

**எல்லாம் நம் விதி ஐந்து பக்க கடிதம் போதுமா குறைந்தது ஒரு இருபது பக்கமாவது வேண்டாமா? அப்படியே தமிழ் மக்களை முட்டாள் ஆக்குவதில் உமக்கு நிகர் நீர்தான்,உம்மை மிஞ்ச ஆள் இல்லை**
 
பின்னர், நான் அனைத்து முதல்வர்களுக்கும் எழுதிய போது, இந்த கடிதத்தையும் இணைத்து அனுப்பினேன்.

**பதவி வாங்க காற்றாக பறந்து டெல்லிக்கு சென்றுபதவி வாங்குவது, மக்களுக்காக கடிதம் மட்டும் எழுதி பொறுப்பை தட்டிகழிப்பது..,**

இன்னும் சொல்லப்போனால், தி.மு.க., சார்பில் வைக்கப்பட்ட ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் இட ஒதுக்கீடு குறித்தும்,  

**தேர்தல் அறிக்கையில்  போட்டால் கோர்ட் தீர்ப்பு குடுத்துவிடுமா ? மனசாட்சி என்பதே இல்லை உமக்கு. **
  
சமூக நீதி பற்றியும் நான் சொல்லாமல் விட்டதே கிடையாது
 
**உயிரே போனாலும் பரவாயில்லை உண்மையை மட்டும் பேசமாட்டேன் என்று சபதம் எடுத்துள்ள ஒருவரை முதல்வராக ஏற்றுகொண்ட நம்மை போல அதிர்ஷ்டசாலிகள் உலகில் வேறு எங்கும் இல்லை**. 

 இவ்வாறு தொடர்ந்து 1920ம் ஆண்டு முதல் சமூக நீதிக்காக, இட ஒதுக்கீட்டிற்காக குரல் கொடுத்து வந்ததன் பயனாகத்தான்,
 
**என்னது இவர் 1920 ம் வருடத்தில் இருந்து குரல் கொடுத்தாரா?  இவரு வயசு என்ன. அப்படின்னா இவரு பிறக்கறதுக்கு முன்னாடியே இருந்து குரல் குடுத்துட்டு வர்றாரா? இது சரியான காமடியா இல்ல இருக்கு. இவர் சொல்றத எல்லாரும் நம்பிடுவாங்கன்னு நெனச்சிட்டாரா?**
 
கடந்த 13ம் தேதி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கபாடியா, நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், சுதந்திரகுமார் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பு, நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாலைவனத்தில் குடிநீர் கிடைக்காமல், சென்று கொண்டிருந்தவர்களுக்கு, வழியிலே ஒரு சிறிய நீரூற்று தென்பட்டதைப் போல, தமிழக மக்களுக்கு அமைந்துள்ளது. 

**ஜெயலலிதா தான் இந்த சட்டத்தை சட்டசபையில் கொண்டுவந்தார்**

 எத்தனையோ ஆண்டு காலமாக இந்த இட ஒதுக்கீட்டுப் பிரச்னைக்காக உண்மையிலேயே பாடுபட்டு வரும் நமக்கு, தேன் துளிகள் தேனருவியாகப் பெருக வேண்டுமென்ற ஆவல் ததும்புவதில் வியப்பில்லை. 

**ஜெயலலிதா ஆட்சியில் தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இட ஒதுக்கீட்டை வாங்கி கொடுத்தார், ஜெயலலிதாவால் தான் இந்த தீர்ப்பு வந்தது **
  
இந்த வெற்றியில் நாம் உரிமை கொண்டாடுவதற்கு, கோர்ட்களில் நாம் நடத்தி வந்துள்ள சட்ட ரீதியான சமூக நீதி போராட்டங்களும், மக்களிடையே ஏற்படுத்திய விழிப்புணர்வும் பெரும் காரணங்கள்.

**கருணாநிதிக்கு பொய் பேசுவதை தவிர வேறு எதுவும் தெரியாது .எம் ஜி ஆர்,கொடுத்த 69 %,இட ஒதுகிட்டிற்கு,ஜெ ஜெ,தமிழக சட்ட சபை மூலம் 1992 ல்,சட்டம் நிறைவேற்றி,நரசிம்ம ராவ் மூலம்,இரண்டு பாராளுமன்ற சபைகளையும் கூட்டி,அரசியல் சட்டத்தின்   9 ம்   பிரிவில் பாதுகாப்பாக வைத்தார். அரசியல் சட்டத்தின்   9 ம் பிரிவு சட்டங்களை,கோர்ட் ஆய்வு செய்ய முடியாது. அதனால் சுப்ரீம் கோர்ட்டால் ஒன்றும் செய்ய முடிய வில்லை .  ஜெயலலிதாவை பாராட்டிவிழாஎடுக்கபோகிறார்கள் என்பதற்காக இந்த அறிக்கை பொய்யை கூறியுள்ளார்**

ஆட்சிக்கு வந்தவுடன், இந்த சமூக நீதியைப் பலமாக பாதுகாத்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோரான வன்னியர்களும், சீர்மரபினர்களும் மற்றும் சில வகுப்பினரும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்கப்பட்டு, 20 சதவீதம் பயன் பெற முடிந்தது.சமூக நீதியில் இந்த இயக்கத்துக்கு உள்ள அக்கறைக்கான எடுத்துக்காட்டுகள்.  

**சுயநலத்திற்காக பல முன்னேறிய சமூகங்களை பிற்பட்டோர் பட்டியலில் இணைத்தும், தன சமூகத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்தும், உண்மையிலேயே பின்தங்கிய சமூகங்களுக்கு எந்தப் பலனும் இல்லாமல் அடித்துவிட்டு, தற்புகழ்ச்சி வேறு** 

அதனால் தான், சமீபத்தில் வந்துள்ள சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தேன் துளிகளாகவும், இது தேனருவியாக மாறும் அளவுக்கு சமூக நீதிப் பயணத்தில் முழுமையான வெற்றியைப் பெற விரும்புகிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார். 

**ஜெயலலிதாவை பாராட்டி விழா எடுக்கபோகிறார்கள் என்பதற்காக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்ததில் இருந்து, மு க,வாயிலும் வயிற்றிலும்,அடித்தக் கொள்கிறார்**..

No comments: