கலைஞர் அரசுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் , அரசின் சாதனைகளில் இதுவும் ஒரு மைல் கல். அய்யா பாமர நடுத்தர மக்களை பற்றி யாருமே சிந்திக்க மாட்டார்களா? விலைவாசி எதுவுமே ஏறவில்லை என்று கூறிவிட்டு அடுத்து மின்சாரத்தில் கை வைத்து விட்டீர்களே?.
புதிய மின் கட்டண ஆணையை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்று வெளியிட்டது. புதிய மின் கட்டண உயர்வு தொடர்பான விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் மின் இணைப்பு பெற்றுள்ள இரண்டு கோடியே ஐந்து லட்சத்து 16 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன. இதில், ஒரு கோடியே 38 லட்சம் பேர், வீடுகளுக்கு இணைப்பு பெற்றுள்ளனர். தமிழகத்தில் கடந்த 2003 மார்ச் மாதம் 15ம் தேதி மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அரசு பலமுறை பரிசீலனை செய்தாலும், இது ஓட்டுக்கு வேட்டு வைக்கும் விவகாரம் என்பதால் அதை தள்ளிப் போட்டு வந்தது. நாடு முழுவதும் மின்தட்டுப் பாடு அதிகரித்துள்ள நிலையில், பற்றாக்குறையை சரிசெய்ய, அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலைக்கு மின் வாரியம் தள்ளப் பட்டது. இதனால், மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் அதிகமானது.புதிய மின் கட்டண விபரங்களை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்று வெளியிட்டது. இதன்படி வீடுகளில் 600 யூனிட்டுகள் மேல் பயன்படுத்தும் போது ஒவ்வொரு யூனிட்டுக்கும் ரூ. 5.75 வசூலிக்கப்பட இருக்கிறது.தமிழக அரசு மக்களுக்கு கொடுக்கும் கரண்டு ஷாக் இது
அரசாங்க ஊழியன் முப்பது வயதில் ரூபாய் பத்தாயிரம் என்றால் 58 வயதில் 25000 சாதாரண நடுத்தர தனியார் பணிகளில் உள்ளவர்கள் தொடர்ந்து 10 வருடம் ஒரு நிறுவனத்தில் இருந்தாலும் சம்பளத்தை இந்த அளவுக்கு உயர்த்தி தரமாட்டார்கள்மின் கட்டணம் உயர்வதால் பாமர மக்களும்,நடுத்தர மக்களும்,கிராம வாசிகளும,விவசாயிகளும் பாதிப்பார்கள்.பண முதலைகளுக்கு அந்த கவலை கிடையாது.பாதிப்பது நாம் மட்டும் தான்.இன்னும் என்ன பாக்கி உள்ளது விலை ஏற்றத்திற்கு அதையும் ஏற்றுங்கள் தமிழக அரசே.
ஒரு மாநில அரசு நிர்வாகம் எப்படி நடைபெற கூடாது என்பதை அறிய தமிழக அரசை காணவேண்டும். சீரான மின்சாரம் இல்லை காரணம் நிர்வாக சீர்கேடு. அதனால் மின்சாரம் இல்லை மின் உற்பத்தி அதிகரிக்கவோ மின்நிலையங்களை பாதுகாக்கவோ மின்சாரம் திருடபடுவதை தடுக்கவோ முனையாத அரசு மின் கட்டணத்தைஉயர்த்துவது அரசின் நிர்வாக் சீர்கேட்டை காட்டுகிறது.
அது சரி, மின்சாரத்துறைக்குன்னு ஒரு அமைச்சர் இருந்ததா ஞாபகம். ஏற்கனவே, ரெண்டு மணி நேரம் கட் ன்னு அறிவிப்பு, உபரியாக நாலு மணி நேரம் கட் என 6 மணிநேரம் மின்சாரகட் . இப்போ இல்லாத மின்சாரத்துக்கு கட்டண உயர்வு . மின்சார பிரச்னையை தீர்க்காமல் விலை ஏறுகிற அதிசயம் தமிழ்நாட்டில் மட்டும்தான் காணமுடியும் பாக்காத வேலைக்கு 40 % சம்பள உயர்வு கொடுக்கும்போது, உபயோகிக்காத மின்சாரத்துக்கு கட்டணம் அழும்போது, ஷாக் அடித்துவிட்டது மின்சாரத்தை தொட்டதால் அல்ல மின்கட்டணத்தை பார்த்ததால் என்று கவிதை எழுதியவர்களே இன்று மின்கட்டணத்தை உயர்த்தினால் இது நிர்வாக சீர்கேட்டையும் , அரசின் தவறான பொருளாதார கொள்கையைத்தான் வெளிப்படுத்துகிறது.
ஏற்கனவே மத்திய அரசு பெட்ரோல்,டீஸல் விலையை உயர்த்தி மக்களை ஒரு வழி பண்ணிக்கொண்டு இருக்கு . என்னடா தமிழ் நாடு அரசு நம்ம மக்களை இன்னும் கொல்லாமல் இருக்கிறார்களே என்று பார்த்தேன். யோசித்து அந்த வேலையும் செய்துவிட்டார்கள்.பத்திரிக்கைகளில் வழக்கம் போல ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளாவில் மின் கட்டணத்தை ஒப்பிடும் போது தமிழ் நாட்டில் கடுகளவுதான் ஏத்தியிருப்ப்பதாக வியாக்கியானம் ,உதாரணம் கூறி உளறுவார். இந்த அரசு நடுத்தர மக்களை குறிவைத்தே இன்றைக்கு இரு மடங்கு விலையை உயர்த்தி தமிழக மக்களை அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கும் சக்தியினை உருவாக்கி சாதனை புரிந்த கலைஞருக்கு பாராட்டுக்கள்.
Tweet | |||||